பிப்.3: சென்னையில் சவரனுக்கு 192 ரூபாய் குறைந்த தங்கம்

பிப்.3: சென்னையில் சவரனுக்கு 192 ரூபாய் குறைந்த தங்கம்
பிப்.3: சென்னையில் சவரனுக்கு 192 ரூபாய் குறைந்த தங்கம்

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. அதன்படி நேற்று முன் தினம் ஒரு சவரன் தங்கத்தின் விலை 37,000 ரூபாய்க்கும், நேற்று 36,520 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் குறைந்து 36,328 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று 4,565 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,541ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று 39,592 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 39,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு 4,925 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 73,600 ரூபாய்க்கும் ஒரு கிராம் வெள்ளியின் விலை 73.60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com