பருப்பு வகைகளுக்கு ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: அமைச்சரவை முடிவு

பருப்பு வகைகளுக்கு ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: அமைச்சரவை முடிவு
பருப்பு வகைகளுக்கு ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: அமைச்சரவை முடிவு

அனைத்து பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 

டெல்லியில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து வகையான பருப்புகளுக்கும் உரிய விலையை பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பொருள்களின் அதிகபட்ச விற்பனை விலையை கண்காணிக்கவும், லாப மீட்பு தடுப்பு தேசிய ஆணையம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2016- 17 ஆம் ஆண்டில் 2.3 கோடி டன் பருப்பு உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியா பருப்பு உற்பத்தியில் தனி இடத்தை பெற்றத்தை தொடர்ந்து, அதன் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் மூலம் பருப்பு ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் இந்தியா போட்டியிட வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com