ஊரடங்குக் காலத்தில் ரூ.30,000 கோடி வரை பணம் எடுத்த பிஎப் சந்தாதாரர்கள்..!
கடந்த நான்கே மாதங்களில் 8 மில்லியனுக்கும் அதிகமானோர் ரூ.30,000 கோடி வரை EPFO பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர். பெரும்பாலானோர் தங்கள் பிஎஃப் பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளது இந்த நிதியாண்டின் நிதி வருவாயை பெருமளவில் பாதிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிஎப் சந்தாதாரர்களில் கிட்டத்தட்ட 3 மில்லியன் பேர் கொரோனா நிதி நிலைமையை காரணம் காட்டி ரூ.8,000 கோடியைத் திரும்பப் பெற்றுள்ளனர். மீதமுள்ள ரூ.22 ஆயிரம் கோடியை 5 மில்லியன் பொது சந்தாதாரர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். திடீர் வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு மற்றும் மருத்துவ செலவுகளே அதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
குறிப்பாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தியபோதே மருத்துவ செலவுக்காக EPFO லிருந்து நிதியைப் பெற்றுக்கொள்ளலாம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதனால் இந்த ஆண்டு வருவாயில் ஏற்படும் நிதியிழப்பு பின்னர்தான் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.