நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஷிக்கு சொந்தமான 1,350 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஷிக்கு சொந்தமான 1,350 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்
நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஷிக்கு சொந்தமான 1,350 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

இந்திய தொழிலதிபர்கள் நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஷிக்கு சொந்தமான 2,300 கிலோ எடை கொண்ட பட்டை தீட்டப்பட்ட வைரம் மற்றும் முத்துக்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சுமார் ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், ஹாங்காங்கிலிருந்து மும்பை கொண்டு வரப்பட்டன.

வைர வியாபாரியான நீரவ் மோடியும், அவரது உறவினரான மெகுல் சோக்ஷியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இருவரும் வெளிநாடு தப்பிச் சென்ற நிலையில், நீரவ் மோடி, லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்

மெகுல் சோக்ஷி ஆண்டிகுவா நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை, இருவருக்கும் சொந்தமான பல்வேறு சொத்துக்களை பறிமுதல் செய்தது.

இதனிடையே இருவரும் தங்களுக்கு சொந்தமான வைர மற்றும் முத்துக்களை துபாய்க்கு கடத்திச் சென்று, பின்னர் ஹாங்காங் கொண்டு சென்றதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை தற்போது, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஷிக்கு சொந்தமான 2,300 கிலோ எடையுள்ள பட்டை தீட்டப்பட்ட வைரம் மற்றும் முத்துக்களை பறிமுதல் செய்தனர். பணமோசடி சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட இந்த நகைகள் ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்புள்ளவைகள் ஆகும். அந்த நகைகள் அனைத்தும் 108 சரக்கு பெட்டிகளில் மும்பை கொண்டுவரப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com