உலகின் முதல் பணக்காரர் அந்தஸ்த்தை இழந்த எலோன் மஸ்க் - ஒரேநாளில் 11 பில்லியன் டாலர் இழப்பு

உலகின் முதல் பணக்காரர் அந்தஸ்த்தை இழந்த எலோன் மஸ்க் - ஒரேநாளில் 11 பில்லியன் டாலர் இழப்பு
உலகின் முதல் பணக்காரர் அந்தஸ்த்தை இழந்த எலோன் மஸ்க் - ஒரேநாளில் 11 பில்லியன் டாலர் இழப்பு

டெஸ்லா நிறுவன பங்குகளின் விலை திடீரென சரிந்ததால், ஒரேநாளில் 11 பில்லியன் டாலரை எலன் மாஸ்க் இழந்தார். இதன் காரணமாக உலகப்பணக்காரர்கள் பட்டியலில் மஸ்க் முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு இறங்கினார்.

வியாழக்கிழமை டெஸ்லாவின் பங்குகள் 6.9 சதவீதம் சரிந்து 653.16 டாலராக இருந்ததால், அவரது நிகர சொத்து மதிப்பிலிருந்து 11 பில்லியன் டாலர்கள் குறைந்தது. இதன் காரணமாக பில்லியனர் தொழிலதிபர் எலோன் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை இழந்தார்ஒரு வார காலமாக டெஸ்லா பங்குகள் அசுரவேகத்தில் உயர்ந்ததன் காரணமாக கடந்த திங்களன்றுதான் (மார்ச்.15), எலன் மஸ்க் அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸை மீண்டும் முந்தி முதல் இடத்தை பெற்றார்.

தற்போது உலகின் 500 பணக்காரர்களின் ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலில், மஸ்க் 169 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளார். அவரின் சொத்துமதிப்பு திங்களன்று 182 பில்லியன் டாலராக  இருந்தது. இதன் காரணமாக ஜெஃப் பெசோஸ் 178 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் முதல் இடத்தைப் பிடித்தார்.

கடந்த ஜனவரி முதல், டெஸ்லாவின் மதிப்பு ஏற்ற இறக்கம் காரணமாக இரு தொழிலதிபர்களும், தங்கள் நிலைகளை அடிக்கடி மாற்றி வருகின்றனர். இங்கே குறிப்பிடத் தக்கது என்னவென்றால், எலோன் மஸ்க் 2020 சுமார் 27 பில்லியன் டாலர் மதிப்பில் தொடங்கினார், மேலும் முதல் 50 பணக்காரர்களின் பட்டியலில் அவர் இல்லை. அதன்பின் டெஸ்லா பங்குகளில் 794 சதவிகிதம் உயர்ந்ததால், ஜூலை மாதம் மஸ்க் ஏஸ் முதலீட்டாளர் வாரன் பபெட்டை முந்தி ஏழாவது இடத்தைப் பெற்றார். நவம்பரில், மஸ்க் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸை இரண்டாவது இடத்திலிருந்து பின்னுக்கு தள்ளினார்.

பில் கேட்ஸின் முழுமையான நிகர மதிப்பு 139 பில்லியன் டாலர்களை விட, டெஸ்லா நிறுவனர் எலன் மாஸ்க் கடந்த 12 மாதங்களில் அதிக செல்வத்தை குவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com