சென்னையில் இ-பைக்கை சார்ஜ் செய்தபோது விபரீதம் - 17 பைக்குகள் எரிந்து சேதம்

சென்னையில் இ-பைக்கை சார்ஜ் செய்தபோது விபரீதம் - 17 பைக்குகள் எரிந்து சேதம்
சென்னையில் இ-பைக்கை சார்ஜ் செய்தபோது விபரீதம் - 17 பைக்குகள் எரிந்து சேதம்

சென்னையில் பேட்டரி பைக்குகளை சார்ஜ் செய்தபோது நேரிட்ட தீ விபத்தில் 17 இ-பைக்குகள் எரிந்து சேதமடைந்தன.

சென்னை போரூரில் குன்றத்தூர் பிரதான சாலையில் ராஜாராம் என்பவர் இ-பைக் ஷோரூம் நடத்தி வருகிறார். இங்கு 5 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். போரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள், இந்த ஷோரூமில் இ-பைக்குகள் வாங்கியுள்ளனர். இதனிடையே, சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு சலுகைகளுடன் பைக் விற்பனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த ஷோரூமில் உள்ள ஒரு இ-பைக்கிற்கு சார்ஜ் போட்டுள்ளனர். அப்போது எதி்ர்பாராதவிதமாக பைக்கில் உள்ள பேட்டரி வெடித்து தீப்பிடித்துள்ளது. இதைப் பார்த்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு கடையை விட்டு வெளியே ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அதற்குள் தீ கடை முழுவதும் மளமளவென பரவியது. இதில் 5 புதிய இ-பைக்குகள் மற்றும் சர்வீஸ் செய்வதற்காக வந்த 12 இ-பைக்குகள் என மொத்தம் 17 பைக்குகள் எரிந்து சேதமானது. மேலும், ஷோரூமிலிருந்த பொருட்களும் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

இதுகுறித்து தகவல் அறிந்த விருகம்பாக்கம் தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பேட்டரிகளால் இயங்கும் இ-பைக்குகள் சமீப காலமாக அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. வாடிக்கையாளர்களும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக இ-பைக்குகளுக்கு மாறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தொடர்ந்து சில இடங்களில் இ-பைக்குகள் தீப்பிடித்து எரிந்து வரும் சம்பவங்களும் அதிகரித்து வருவது வாடிக்கையாளர்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com