வணிகம்
ரூ.2500 கோடி இலக்கு: தயாராகும் இணைய வணிக நிறுவனங்கள்
ரூ.2500 கோடி இலக்கு: தயாராகும் இணைய வணிக நிறுவனங்கள்
இந்த ஆண்டின் பண்டிகை சீசனில் சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்ய இணைய தள விற்பனை நிறுவனங்கள் தயாராகி வருவதாக கணிக்கப்பட்டுள்ளது.
ரெட்சீர் கன்சல்டிங் என்ற சந்தை ஆய்வு நிறுவனம் இதைக் கணித்திருக்கிறது. கடந்த ஆண்டில் சுமார் ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரை இணைய தள வணிக நிறுவனங்கள் வர்த்தகம் செய்த நிலையில், இந்த பண்டிகை சீசனில் அது இரண்டு மடங்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.