புகழ்பெற்ற உள்நாட்டுப் பயணிகள் விமானமான விஸ்தாரா நிறுவனம் தீபாவளி பண்டிகையொட்டி அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.
உள்நாட்டுப் பயணிகள் விமானமான விஸ்தாரா நிறுவனம் 1,149 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது. இந்த சலுகை இன்று முதல் துவங்கி அக்டோபர் 12ஆம் தேதி இரவு 11.59 மணி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். இந்த 48 மணி நேரத்தில் டிக்கெட்களை பதிவு செய்வோர் விஸ்தாராவின் அதிரடி சலுகையை பெற்று மகிழலாம் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் குறைந்த அளவில் மட்டுமே டிக்கெட்டுகள் சலுகை விலையில் உள்ளதால் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்றும் விஸ்தாரா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.