\
தமிழகத்தில் ரூ.100ஐ தாண்டியது டீசல் விலை - வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் ரூ.100ஐ தாண்டியது டீசல் விலை - வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் ரூ.100ஐ தாண்டியது டீசல் விலை - வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி
Published on

தமிழகத்தில் முதன்முறையாக டீசல் விலை 100 ரூபாயை தாண்டியதால் வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் குமராட்சி பகுதியில் ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய் 29 காசுக்கு விற்பனையாகிறது.. சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 34காசு அதிகரித்து, 97 ரூபாய் 93 காசுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கான வாடகை உயர்ந்து விலைவாசி அதிகரிக்க வழிவகுக்கும் என லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102ரூபாயை தாண்டியுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 31 காசு அதிகரித்து, 102ரூபாய் 10காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com