புத்தாடை, பட்டாசு முதல் அலங்கார பொருள்கள் வரை.. களைகட்டும் தீபாவளி ஷாப்பிங்!

புத்தாடை, பட்டாசு முதல் அலங்கார பொருள்கள் வரை.. களைகட்டும் தீபாவளி ஷாப்பிங்!
புத்தாடை, பட்டாசு முதல் அலங்கார பொருள்கள் வரை.. களைகட்டும் தீபாவளி ஷாப்பிங்!
Published on

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இறுதிநேர ஷாப்பிங் சூடுபிடித்துள்ளது. கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

சென்னை தி.நகரில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை தொடர்ந்து, முக்கிய இடங்களில் 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தீபாவளிக்கு, புத்தாடைகளை மட்டுமன்றி வீட்டு உபயோகப் பொருட்கள், நகைகளை வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் சிறிய கடை முதல் பெரிய கடை வரை மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.



சென்னையை போலவே வடகோவையிலும் தீபாவளி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அங்கு, பட்டாசுகளுக்கான சந்தை இந்த ஆண்டு விரிவடைந்துள்ளது. அப்பகுதி மக்கள், பட்டாசு வாங்க மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இதனால் அங்கு பட்டாசு விற்பனை மீது கூடுதல் கண்காணிப்புகள் வைக்கப்பட்டிருக்கிறது. அரசு சார்பில் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய அனுமதி வைக்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும், 500வகையான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளதாகத் தகவல்

நெல்லை டவுண் பகுதியில் புத்தாடைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதனால் துணிக்கடைகள் அதிகமுள்ள வடக்கு ரத வீதியில் மக்கள் கூட்டம் அதிகளவில் அன்றாடம் நிரம்பி வழிகிறது. முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே கடைக்குள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. காவல்துறையினரும் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு வீதிகளில் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சில் உள்ள NSC போஸ் சாலை, சின்னக்கடை வீதி, பெரியக்கடை வீதிகள் மக்கள் கூட்டத்தால் களைகட்டின. கடலூரில் நகர் பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் ஆர்வமுடன் புத்தாடைகளை எடுத்தனர். எனினும் கடந்த ஆண்டுகளைவிட விற்பனை மந்தமாகவே உள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

தமிழகத்தை போலவே டெல்லியிலும் வேகமாக தீபாவளி விற்பனை நடந்து வருகிறது. அங்கு அலங்காரப் பொருட்கள், அகல் விளக்குகளை வாங்க ஆர்வம் அதிகமாக உள்ளது. டெல்லியில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதிகளான மயூர்விகார் பகுதியில் மக்கள் தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர். இதற்காக புத்தாடைகள் எடுத்தும் வீட்டு உபயோக பொருட்கள், அலங்கார பொருட்கள், அகல் விளக்குகளையும் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com