டிச.23: மீண்டும் குறைந்த தங்கம் விலை

டிச.23: மீண்டும் குறைந்த தங்கம் விலை
டிச.23: மீண்டும் குறைந்த தங்கம் விலை

சென்னையில் மீண்டும் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த ஒரு வாரமாக ஏறுமுகத்தை சந்தித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலையானது நேற்று சவரனுக்கு 352 ரூபாய் குறைந்து 37,800க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து 37,704 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையானது 4,713 ரூபாயாக உள்ளது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5,097 ரூபாயாகவும் உள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 70,500 ரூபாயாகவும் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com