பேஸ்புக்கில் தினசரி பயனர்களின் எண்ணிக்கை சரிவு: 20% சரிந்த மெட்டா நிறுவன பங்குகள்

பேஸ்புக்கில் தினசரி பயனர்களின் எண்ணிக்கை சரிவு: 20% சரிந்த மெட்டா நிறுவன பங்குகள்

பேஸ்புக்கில் தினசரி பயனர்களின் எண்ணிக்கை சரிவு: 20% சரிந்த மெட்டா நிறுவன பங்குகள்
Published on

மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 20 சதவிகிதம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் ஃபேஸ்புக் தளத்தில் தினசரி ஆக்டிவ் பயனர்களின் எண்ணிக்கை கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது முதல் முறையாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 1.930 பில்லியனில் இருந்து 1.929 பில்லியனாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிக்டாக் மற்றும் யூடியூப் தளத்தின் போட்டி மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் தனியுரிமை கொள்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம் இந்த சரிவுக்கு காரணம் என மெட்டா விளக்கம் கொடுத்துள்ளது. இதனால் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் பின்னடைவை சந்தித்துள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது. 

மெட்டா நிறுவனம் தொடர்ச்சியாக வருவாய் இழப்பை சந்தித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com