டாடா குழுமத்துக்கு எதிராக மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தார் சைரஸ் மிஸ்திரி

டாடா குழுமத்துக்கு எதிராக மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தார் சைரஸ் மிஸ்திரி
டாடா குழுமத்துக்கு எதிராக மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தார் சைரஸ் மிஸ்திரி

டாடா குழுமத்துக்கும் சைரஸ் மிஸ்திரிக்கும் இடையேயான நான்கு ஆண்டு கால வழக்கு யுத்தம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டாலும், கடைசி ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது எஸ்பி குழுமம்.

கடந்த மார்ச் 26-ம் தேதி டாடா குழுமத்துக்கு சாதகமான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதில், சைரஸ் மிஸ்திரிக்கு எதிரான பல கருத்துகளை உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அந்த தீர்ப்பினை எதிர்த்து, சைரஸ் மிஸ்திரி மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

டாடா குழுமத்தில் மிஸ்திரி குழுமத்துக்கு 18.37 சதவீத பங்குகள் உள்ளன. இந்தப் பங்குகளை அடிப்படையாக வைத்து டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக சைரஸ் மிஸ்திரி நியமனம் செய்யப்பட்டார். 2012-ம் ஆண்டு ரத்தன் டாடா ஓய்வு பெற்றதை அடுத்து சைரஸ் மிஸ்திரி டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரானார்.

ஆனால், கருத்து வேறுபாடு அதிகரிக்கவே, 2016-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதிவியில் இருந்து அதிரடியாக மிஸ்திரி நீக்கப்பட்டார். டாடா நானோ, ஏர் ஏசியா, கோரஸ் நிறுவனத்தை வாங்கியது உள்ளிட்ட சில விவகாரங்களில் டாடா குழுமத்துக்கும் மிஸ்திரிக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது.

அப்போது முதல் இவரது நீக்கம் மீதான சட்டப் போராட்டம் நடந்துவருகிறது. சமீபத்தில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை அறிவித்த உச்ச நீதிமன்றம், சைரஸ் மிஸ்திரியை நீக்கியதில் எந்த தவறும் இல்லை என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தற்போது இறுதிகட்ட நடவடிக்கையாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com