சைபர் கிரைம் தாக்குதலால் மணிக்கு ரூ.88,553 வங்கிகளுக்கு இழப்பு

சைபர் கிரைம் தாக்குதலால் மணிக்கு ரூ.88,553 வங்கிகளுக்கு இழப்பு
சைபர் கிரைம் தாக்குதலால் மணிக்கு ரூ.88,553 வங்கிகளுக்கு இழப்பு

சைபர் கிரைம் தாக்குதலால் இந்தியாவில் உள்ள வங்கிகள் கடந்த மூன்றாண்டுகளில் 3 மாதத்தில் மணிக்கு ரூ.88,553-ஐ இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், கடந்த 2014 ஏப்ரல் 1 முதல் 2017 ஜூன் 30 வரையிலான காலத்தில் வங்கிகள் இழந்த மொத்த பணம் ரூ.252 கோடி என்றும் கூறப்படுகிறது. இதே கால அளவில் சைபர் கிரைம் தொடர்பாக தினசரி ரூ.21.24 லட்சம் திருடப்பட்டதாக 40 புகார்கள் பெறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட 102 வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் இது தெரியவந்துள்ளது.

கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் மற்றும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் ஆகியவை தொடர்பாக மேலேகுறிப்பிட்ட காலத்தில் 46,612 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மிங் செய்வது முதல் ஆன்லைன் பணபரிவர்த்தனைகளை ஹேக்கிங் செய்வது வரை பல்வேறு முறைகளால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், 2017-18 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் 1–ஜூன் 30) வங்கிகளுக்கு சைபர் கிரைம் தொடர்பாக தினசரி சராசரியாக 57 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை முந்தைய 3 ஆண்டுகளில் 40ஆக இருந்தது. அதேபோல வங்கிகளுக்கு ஒருமணி நேரத்தில் ஏற்படும் இழப்பு ரூ.88,553-ல் இருந்து ரூ.89,880-ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட 23 வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் இது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com