\
சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சுங்கவரி நீக்கம்

சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சுங்கவரி நீக்கம்

சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சுங்கவரி நீக்கம்
Published on: 

சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்கவரி முற்றிலும் நீக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் அவற்றின் விலை 5 முதல் 20 ரூபாய் வரை குறைந்துள்ளது.

பண்டிகை காலத்தில் சமையல் எண்ணெயின் விலையைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இறக்குமதி வரி குறைப்பு, இருப்பு வைத்துக்கொள்ள கட்டுப்பாடுகள், விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2 புள்ளி 5 விழுக்காடு சுங்கவரி முற்றிலும் நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் சமையல் எண்ணெயின் விலை 5 முதல் 20 ரூபாய் வரை குறைந்திருப்பதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைச் செயலாளர் சுதன்ஷூ பாண்டே தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com