நீலகிரி மாவட்டம் உதகையில் கந்துவட்டியை கட்டுப்படுத்தும் விதமாக கூட்டுறவு வங்கி சார்பாக கடன் மேளா நடைபெற்றது.
சமீப காலமாக தமிழகத்தில் கந்துவட்டிகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதில் சிக்கிய பலரும் தற்கொலை செய்து கொள்ளும் அன்றாடம் நிகழ்வும் நடந்து வருகிறது.இதை தடுக்கும் வகையில் நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழகத்திலேயே முதல்முறையாக உதகை நகர கூட்டுறவு வங்கியின் சார்பில் கடன் மேளா நடந்தது.
இந்தக் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் உரிய ஆவனங்களுடன் வரும் விவசாயிகள், வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கபட்டன. இதுபோன்ற விழிப்புணர்வு கடன் வழங்கும் நிகழ்ச்சிகள் மூலம் கந்து வட்டிக்காரகளிடம் மக்கள் சிக்குவது தவிர்க்கப்படும் என்றும் தமிழகம் முழுவதும் வங்கிகள் இதுபோன்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.