கொரோனா எதிரொலி: அதிக பரப்பளவுள்ள வீடுகளின் விற்பனை உயர்வு!

கொரோனா எதிரொலி: அதிக பரப்பளவுள்ள வீடுகளின் விற்பனை உயர்வு!

கொரோனா எதிரொலி: அதிக பரப்பளவுள்ள வீடுகளின் விற்பனை உயர்வு!
Published on

கொரோனா தொற்றைத் தொடர்ந்து அதிக பரப்பளவுள்ள வீடுகளை வாங்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் வாங்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் சராசரி பரப்பளவு அண்மை ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வந்ததாகவும் ஆனால் கடந்தாண்டு இது அதிகரித்ததாகவும் அனராக் கன்சல்டன்ட் என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்ததாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. 

2019-ஆம் ஆண்டு விற்பனையான அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் சராசரி பரப்பளவு ஆயிரத்து 50 சதுர அடியாக இருந்த நிலையில், 2020இல் இது ஆயிரத்து 150 சதுர அடியாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

வீடுகளில் இருந்தே பணிபுரிவது, கல்வி கற்பது ஆகிய சூழல்கள் பரவலானதால் அதிக பரப்பளவுள்ள வீடுகளுக்கு தேவை அதிகரித்திருக்கலாம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com