ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!

ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!

ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
Published on

எண்ணெய் நிறுவனங்கள் ஒரே மாதத்தில் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் உயர்த்தியுள்ளன.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ரூ.25அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் ரூ.100அதிகரித்து தற்போது சிலிண்டரின் விலை ரூ.810ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், வெங்காயம் வரிசையில் கேஸ் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்

முன்னதாக, 2020 ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றின் விலை 734 ரூபாயாக இருந்தது. அதற்கு அடுத்த மாதத்திலேயே சிலிண்டரின் விலையானது 734 லிருந்து 881 ரூபாயாக உயர்ந்தது. அடுத்து வந்த மாதங்களில் சிலிண்டர் விலை இறங்குமுகத்தில் காணப்பட்ட நிலையில், மே மாதத்தில் அந்த ஆண்டின் குறைந்தபட்ச விலையாக ஒரு சிலிண்டரின் விலை 569 ரூபாய் 50 காசாக விற்கப்பட்டது.

அடுத்து வந்த மாதங்களில் சிலிண்டர் விலை மாற்றமில்லாமல் காணப்பட்ட நிலையில், சென்ற செப்டம்பரில் சிலிண்டர் ஒன்றின் விலை 610 ரூபாயாகவும், டிசம்பர் ஒன்றாம் தேதி 660 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. டிசம்பர் 15ஆம் தேதி சிலிண்டர் ஒன்றின் விலை 710 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த மாதம் 4ம் தேதி ரூ.25 அதிகரித்து ரூ.735ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 15ல் மேலும் ரூ.50 அதிகரித்து 785ஆக இருந்தது. இந்நிலையில் இன்று மேலும் ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைய விலை ரூ.810ஆக உள்ளது. வீட்டு சமையலுக்கான சிலிண்டரின் விலை ஒரே மாதத்தில் ரூ.100அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com