உயர்கிறது புதிய சமையல் எரிவாயு இணைப்புக்கான காப்புத்தொகை!

உயர்கிறது புதிய சமையல் எரிவாயு இணைப்புக்கான காப்புத்தொகை!
உயர்கிறது புதிய சமையல் எரிவாயு இணைப்புக்கான காப்புத்தொகை!

புதிய சமையல் எரிவாயு இணைப்புக்கான காப்புத்தொகை அதிகரித்துள்ளது.

சமையல் எரிவாயு இணைப்புக்கு விண்ணப்பிக்கும்போது ஒரு சிலிண்டர் என்றால் இதுவரை 1,450 ரூபாய் காப்புத் தொகை பெறப்பட்டது. இந்நிலையில் இதை 2,200 ரூபாயாக எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இதுவே இரண்டு சிலிண்டர் பெற விரும்பினால் 2,900 ஆக இருந்த காப்புத் தொகை 4,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

5 கிலோ சிலிண்டர் பெற விண்ணப்பித்தால் காப்புத் தொகை 800 ரூபாயில் இருந்து 1,150 ஆக அதிகரித்துள்ளது. ரெகுலேட்டர் காப்புத் தொகையும் 150 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com