\
வணிக பயன்பாட்டிற்கான  சிலிண்டர் விலை ரூ.2,133 க்கு விற்பனை

வணிக பயன்பாட்டிற்கான  சிலிண்டர் விலை ரூ.2,133 க்கு விற்பனை

வணிக பயன்பாட்டிற்கான  சிலிண்டர் விலை ரூ.2,133 க்கு விற்பனை
Published on: 

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 268 ரூபாய்  உயர்ந்து 2,133 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் பெட்ரோல் டீசல் விலையை தினமும் மாற்றி அமைப்பதுபோல், சிலிண்டர் விலையின் நிலவரத்தையும் மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மாற்றி அமைத்து வருகின்றனர். அதன்படி, நவம்பர் மாதத்திற்கான சிலிண்டர் விலை இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 268 ரூபாய்  உயர்ந்து 2,133 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் 915.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் இன்னும் ஒரிரு நாட்களில் உயரும் என்று தெரியவருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com