வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்வு

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்வு

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்வு
Published on

வணிக ரீதியான பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை 268 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்திற்கேற்ப பெட்ரோலிய பொருட்களின் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்கின்றன. பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றம் செய்யப்படும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை மாதத்தின் முதல்நாளில் மாற்றி அறிவிக்கப்படுகின்றன. அதன்படி, வணிக எரிவாயு சிலிண்டர் விலை 268 ரூபாய் 50 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சிலிண்டரின் விலை 2 ஆயிரத்து 137 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 406 ரூபாயாக உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதால் ஹோட்டல்களில் உணவுப் பொருள்களின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com