அடுத்த 10 ஆண்டுகளில் வருடத்துக்கு 5% ஊழியர்களைக் குறைக்கிறது 'கோல் இந்தியா'

அடுத்த 10 ஆண்டுகளில் வருடத்துக்கு 5% ஊழியர்களைக் குறைக்கிறது 'கோல் இந்தியா'
அடுத்த 10 ஆண்டுகளில் வருடத்துக்கு 5% ஊழியர்களைக் குறைக்கிறது 'கோல் இந்தியா'

உலகின் மிகப்பெரிய சுரங்க நிறுவனமான 'கோல் இந்தியா' அடுத்த 10 ஆண்டுகளில் வருடத்துக்கு 5 சதவீத பணியாளர்களை நீக்க திட்டமிட்டுள்ளது. தற்போது 2.72 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். அதேபோல சாத்தியம் இல்லாத சுரங்கங்களை மூடவும் 'கோல் இந்தியா' திட்டமிட்டிருக்கிறது.

இந்த நிறுவனத்திடம் உள்ள சுரங்கங்களில் 158 சுரங்கங்களில் 43 சதவீத பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால், மொத்த உற்பத்தியில் இந்த சுரங்கங்களின் பங்கு 5 சதவீதம் மட்டுமே. அதனால், பொருளாதார ரீதியில் சாத்தியம் இல்லாத சுரங்கங்களை படிப்படியாக மூட திட்டமிட்டிருக்கிறோம் என 'கோல் இந்தியா' தெரிவித்திருக்கிறது.

இதுபோல 11 சுரங்கங்களை ஏற்கெனவே மூடப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் அனாவசிய செலவுகளை குறைப்பது மட்டுமல்லாமல், செயல் திறனையும் மேம்படுத்த முடியும் என 'கோல் இந்தியா' தெரிவித்திருக்கிறது.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீத பங்கு 'கோல் இந்தியா' மூலமே கிடைக்கிறது. 2023-24-ம் நிதி ஆண்டில் 100 கோடி டன் அளவுக்கு உற்பத்தி இலக்கை எட்ட நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

டிவிடென்ட்:

கடந்த நிதி ஆண்டுக்கான இறுதி டிவிடென்டாக ஒரு பங்குக்கு ரூ.3.5 வழங்க இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதனையும் சேர்த்து கடந்த நிதி ஆண்டில் ஒரு பங்குக்கு ரூ.16 என்னும் அளவுக்கு டிவிடென்ட் வழங்கப்பட்டிருக்கிறது.

'கோல் இந்தியா' பொதுத்துறை நிறுவனம். இந்த நிறுவனத்தில் மத்திய அரசின் பங்கு 66.1 சதவீதமாக இருப்பதால் தற்போது அறிவிக்கப்பட்ட இடைக்கால டிவிடென்ட் மூலம் அரசுக்கு ரூ.1,426 கோடி டிவிடென்ட் தொகை கிடைக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com