\
டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்ற நாமக்கல்காரர்

டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்ற நாமக்கல்காரர்

டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்ற நாமக்கல்காரர்
Published on

டாடா தொழிற்குழுமத்தின் தலைவராக நாமக்கல்காரரான என்.சந்திரசேகரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

டாடா குழும தலைவராக இருந்த சைரஸ் மிஸ்த்ரி நீக்கப்பட்ட நிலையில் அவரது இடத்துக்கு சந்திரசேகரன் கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யங்களில் ஒன்றின் தலைவராக பதவியேற்கும் சந்திரசேகரனின் சொந்த ஊர் நாமக்கல் அருகிலுள்ள மோகனூர் ஆகும். டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ்ஸின் தலைமைப் பொறுப்பையும் சந்திரசேகரன் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத் தலைமையகத்துக்கு இன்று காலை வந்த சந்திரசேகரிடம், அந்தக் குழுமத்தின் தற்காலிக தலைவராக இருந்த ரத்தன் டாடா பொறுப்புகளை ஒப்படைத்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com