RBIRBI twitter page
வணிகம்
மீண்டும் உயர்கிறது வங்கிக் கடன் வட்டி? #RBI
வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மீண்டும் உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மீண்டும் உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கைக் கூட்டம் இன்று தொடங்க உள்ளது. இதில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி கால் சதவீதம் உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பணவீக்கத்தை, உகந்த வரம்பான 6 சதவீதத்துக்குள் கொண்டுவரும் நோக்கில், வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி ஓராண்டாக உயர்த்திவருகிறது. இவ்வாறு, கடந்த ஓராண்டில் மட்டும் இரண்டரை சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் விளைவாக வீடு, வாகனம், தனி நபர் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களுக்கான வட்டி கணிசமாக அதிகரித்து, தவணைத் தொகை அல்லது தவணைக் காலம் உயர்ந்துள்ளது.