“பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன” - நிர்மலா சீதாராமன்
நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார சூழல் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசி வரும் நிர்மலா சீதாராமன், “நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. பொருளாதார சூழல் மீண்டு வருவதற்கான சீரான அறிகுறிகள் தென்படுகின்றன. ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு பலனை, நுகர்வோருக்கு வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
பொதுத்துறை வங்கிகளின் தலைவரை வரும் 19ஆம் தேதி சந்திக்கயிருக்கிறோம். வங்கிகள் கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. தொழில் நடைமுறைகளை எளிதாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுகுறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்றுமதி சலுகைகள் அளிக்கப்படும். 2020ஆம் ஆண்டு முதல் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய திட்டம் கொண்டுவரப்படும்” என்று கூறினார்.