சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, தேனா பேங்க் ஆகியவை சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டியை அரை சதவிகிதம் குறைத்துள்ளன.
50 லட்சம் ரூபாய்க்குட்பட்ட டெபாசிட்டுகளுக்கு இவ்வட்டிக் குறைப்பு பொருந்தும் என சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவும் 25 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கு வட்டிக்குறைப்பு பொருந்தும் என்று தேனா வங்கியும் தெரிவித்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, பரோடா வங்கி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வங்கிகள் ஏற்கனவே சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டியை குறைத்துள்ளன.