தமிழக கேரள எல்லைப்பகுதி மற்றும் போடிமெட்டு பகுதியில் ஏலக்காய் வரத்து குறைந்ததால் அதன் விலை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஏலக்காய் உற்பத்தியில் கேரளா முதலிடம் வகிக்கிறது. இங்குள்ள இடுக்கி மாவட்டத்தில் இருந்து ஆண்டுக்கு ஆயிரம் மெட்ரிக் டன் ஏலக்காய் உற்பத்தியாகிறது. தற்போது கம்பம் மற்றும் போடிமெட்டு பகுதியில் இருந்து வரும் ஏலக்காயின் வரத்து குறைந்துள்ளது. இதனால் இதன் விலை அதிகரித்து 1 கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்நிலையில் ஏலக்காயின் தேவை அதிகரித்துள்ளதாலும், விலையும் அதிகரித்து விற்பனையாவதாலும் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.