ஜிஎஸ்டி எதிரொலியால் கார்களின் விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இம்மாதம் 1ம் தேதி ஜிஎஸ்டி இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. சாதரண வகைகார்களுக்கான வரி ஜிஎஸ்டி அமலுக்குப்பிறகு 15 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.
ஜிஎஸ்டிக்கு முன் கார்களுக்கான வரி குறையும், அல்லது அதற்கு முன் கார் நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்த்து கார் வாங்குவதை பலரும் ஒத்தி வைத்து வந்தனர்.
இதனால் கார் விற்பனை கடுமையாகக் குறைந்துள்ளது. விற்பனையில் முதலிடம் வகித்து வந்த மாருதி சுஷுகி ஆல்டோவின் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விற்பனை 23 ஆயிரத்து 618 கார்கள். இந்த ஆண்டு 14 ஆயிரத்து 865 கார்களாகச் சரிந்துள்ளது. இதே போல் விற்பனையில் அடுத்த இடத்தில் உள்ள ஹூண்டாய் ஐ10 கார் கடந்த ஆண்டை விட 667 கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. கடந்த 12ஆயிரத்து 317 கார்கள் விற்பனையாகி இருந்தன. விற்பனையில் மூன்றாம் இடம் வகிக்கும் மாருதி சுஷுகி டிசையர் 12 ஆயிரத்து 49 கார்கள் கடந்த ஆண்டு விற்பனையாகி இருந்தது. இந்தாண்டு விற்பனை 9 ஆயிரத்து 413 மட்டுமே.
மாருதி சுஷுகி வேகன் ஆர் 15 ஆயிரத்து 471ல் இருந்து 10 ஆயிரத்து 668 ஆக குறைந்துள்ளது. மாருதி சுஷுகி பலேனோ 14ஆயிரத்து 629ல் இருந்து 9 ஆயிரத்து 57 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.
கடந்த ஆண்டு 16 ஆயிரத்து 532 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகி இருந்தன. தற்போது 9 ஆயிரத்து 8 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.
ஹூண்டாய் க்ரெட்டா 8ஆயிரத்து 377ல் இருந்து 6 ஆயிரத்து 436 ஆக சரிவடைந்துள்ளது. அதேபோல், ரெணால்ட் க்விட் கார் 5ஆயிரத்து 439 மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. டாடா டியாகோ கார்களின் விற்பனை 5 ஆயிரத்து 438 ஆகவும் உள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு இந்தக்கார்களின் விற்பனையை அதிகரிக்க கார் உற்பத்தி நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.