ஜி.எஸ்.டி வரி விதிப்பு: விற்பனையாளர்கள் கவனத்திற்கு..!

ஜி.எஸ்.டி வரி விதிப்பு: விற்பனையாளர்கள் கவனத்திற்கு..!
ஜி.எஸ்.டி வரி விதிப்பு: விற்பனையாளர்கள் கவனத்திற்கு..!

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அமலானதற்குப் பிறகு, விலை ஏற்ற இறக்கம் குறித்து ஆய்வு நடத்திய கேபினட் செயலர் பி.கே.சின்ஹா, விற்பனையாளர்கள் தங்களது பில்லிங் சாதனங்களை ஜி.எஸ்.டி வரிவிகிதங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

கேபினட் அமைச்சர்கள் சந்திப்பில் இதுகுறித்து அவர் பேசுகையில், “புதிய வரி நடைமுறைக்கு வந்த பின்பு, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் அவற்றின் விலை கட்டுப்பாட்டில் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதுமட்டுமில்லாமல், சில்லறை விற்பனையாளர்கள், மொத்த வியாபாரிகள், போன்றோர் தாங்கள் விற்கும் பொருட்களின் விலைப்பட்டியலை வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்கவேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், “ஜி.எஸ்.டி-யின் பலன் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும். விற்பனையாளர்கள், தாங்கள் பயன்படுத்தும் கணினிகள், இயந்திரங்களைப் புதிய வரி விகிதங்களுக்கு ஏற்ற வகையில் விரைவாக மாற்றியமைக்க வேண்டும். அதிகாரிகளும், மக்களின், வியாபாரிகளின் அனைத்து விதமான சந்தேகங்களையும் தீர்த்து வைக்கக்கூடிய அளவில் தங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று சின்ஹா கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com