உயர்ந்த டீசல் விலை... நஷ்டத்தை தவிர்க்க என்ன செய்யும் போக்குவரத்து கழகம்? கசிந்த தகவல்

உயர்ந்த டீசல் விலை... நஷ்டத்தை தவிர்க்க என்ன செய்யும் போக்குவரத்து கழகம்? கசிந்த தகவல்
உயர்ந்த டீசல் விலை... நஷ்டத்தை தவிர்க்க என்ன செய்யும் போக்குவரத்து கழகம்? கசிந்த தகவல்

மொத்தவிலையில் டீசல் லிட்டருக்கு 25 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து கழகம் பாதிக்கப்படாமல் இருக்க சில்லறை விற்பனை விலையில் டீசலை வாங்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், இந்தியாவில் மொத்தமாக டீசல் வாங்கும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு டீசல் லிட்டருக்கு 25 ரூபாய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சில்லறை விற்பனையில் டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், தமிழக அரசின் போக்குவரத்துக் கழகம் பாதிக்கப்படாமல் இருக்க சில்லறை விற்பனை விலையில் டீசல் வழங்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும், சில்லறை விற்பனை விலையிலிருந்து 69 காசுகள் வரை குறைத்து போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கவும் எண்ணெய் நிறுவனங்கள் தயாராக இருப்பதாக போக்குவரத்துத்துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு நாளொன்றுக்கு 16 லட்சம் லிட்டர் டீசல் கொள்முதல் செய்து வரும் நிலையில், தினமும் மூன்றரை கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியிருந்தது.'

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com