மத்திய பட்ஜெட் 2025 - 2026 நிதியமைச்சர் உரை: சில சுவாரஸ்ய நிகழ்வுகள்!
நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன் வாசித்த பட்ஜெட் உரைகளின் நீளம்:
2019 - 2020 மத்திய பட்ஜெட்டில், நிர்மலா சீதாராமன் வாசித்த உரையின் நீளம் 2.15 மணி நேரம்.
2020 - 2021 மத்திய பட்ஜெட்டில், நிர்மலா சீதாராமன் வாசித்த உரையின் நீளம் 2.42 மணி நேரம்.
2021 -2022 மத்திய பட்ஜெட்டில், நிர்மலா சீதாராமன் வாசித்த உரையின் நீளம் 1.40 மணி நேரம்.
2022-2023 மத்திய பட்ஜெட்டில், நிர்மலா சீதாராமன் வாசித்த உரையின் நீளம் 1.32 மணி நேரம்.
2023 -2024 மத்திய பட்ஜெட்டில், நிர்மலா சீதாராமன் வாசித்த உரையின் நீளம் 1.26 மணி நேரம்.
2024 -2025 மத்திய இடைக்கால பட்ஜெட்டில், நிர்மலா சீதாராமன் வாசித்த உரையின் நீளம் 57 நிமிடங்கள்.
2024 - 2025 மத்திய பட்ஜெட்டில், நிர்மலா சீதாராமன் வாசித்த உரையின் நீளம் 1.25 மணி நேரம்.
2025 - 2026 மத்திய பட்ஜெட்டில், நிர்மலா சீதாராமன் வாசித்த உரையின் நீளம் 1.15 மணி நேரம்.
தெலுங்கு கவிதையோடு உரையை தொடங்கிய நிதியமைச்சர்:
திருக்குறளை மேற்கோள்காட்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவ
கோல்நோக்கி வாழுங் குடி.
மு.வரதராசனார் விளக்கம்:
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன. அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
புடவையின் கலையும் கதையும்!
தொடர்ந்து 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன், பீகாரின் பாரம்பரிய கலை வடிவமான மதுபானி கலை நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள வெள்ளை நிறத்திலான சேலையை அணிந்துள்ளார். சிவப்பு ரவிக்கை மற்றும் தங்க நிற பார்டர் கூடிய சேலை அனைவராலும் கவனிக்கப்பட்டுள்ளது.
இது மதுபானி கலையையும், கடந்த 2021 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரிதேவியின் திறமையை போற்றும் வகையிலும் அவரால் தயாரிக்கப்பட்ட Madhubani Art புடவையை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் மதுபானி கலை, பழங்கால கலை வடிவமாகும். இந்து கடவுள்கள், தெய்வங்கள், புராண காட்சிகள், ஓவியங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. பீகார் மாநிலம் மிதிலா பகுதியில் உள்ள மதுபானி மாவட்டத்தில் வரையப்படும் ஓவியம் மதுபானி அல்லது மிதிலா ஓவியம் என்று அழைக்கப்படுகிறது.
துலாரி தேவி தனது தொழிலாளியான கர்பூரி தேவியிடம் இருந்து கலை வடிவத்தை தேர்ந்தெடுத்தார். அவர் ஒரு திறமையான ஓவியர்.தனது வாழ்க்கையில் கடுமையான சவால்களை எதிர்கொண்ட அவர், குழந்தை திருமணம், எய்ட்ஸ், கருக்கொலை போன்ற பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை தனது ஓவியங்கள் மூலம் பரப்புகிறார்.
அவர் 50க்கும் மேற்பட்ட கண்காட்சிகளில் குறைந்தது 10,000 ஓவியங்களை வரைந்துள்ளார். இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் நிதியமைச்சர் இந்த புடவையை அணிந்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.