union budget 2025 and where each rupee comes from and where it goes
நிர்மலா சீதாராமன்எக்ஸ் தளம்

மத்திய பட்ஜெட் 2025 | ஒரு ரூபாயில் அரசின் வரவு, செலவுகள்..

மத்திய அரசுக்கு வரும் ஒவ்வொரு ரூபாயும் எப்படி வருகிறது... எப்படி செலவாகிறது? பட்ஜெட்டில் வெளியான புள்ளிவிவரத்தை தற்போது காணலாம்.
Published on

மத்திய அரசின் ஒவ்வொரு ரூபாய் வருவாயிலும் அதிகபட்சமாக கடன் மற்றும் இதர இனங்கள் வாயிலாக 24 காசுகள் கிடைக்கிறது. வருமான வரி மூலம் 22 காசுகள், ஜிஎஸ்டி வரி மூலம் 18 காசுகள், கார்ப்பரேட் வரி மூலம் 17 காசுகள் கிடைக்கிறது. வரி அல்லாத வழிகளில் 9 காசும் கலால் வரி வகையில் 5 காசும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. சுங்க வரியாக 4 காசுகள் கிடைக்கும் நிலையில் கடன் அல்லாத மூலதன வருவாயாக ஒரு காசு கிடைக்கிறது.

union budget 2025 and where each rupee comes from and where it goes
மத்திய அரசுட்விட்டர்

மறுபுறம், அரசின் ஒவ்வொரு ரூபாயும் எப்படி செலவாகிறது என்பதை பார்ப்போம். மாநிலங்களுக்கு வரி பங்கு என்ற வகையில் 22 காசுகள் செலவளிக்கப்படுகிறது. கடன்களுக்கான வட்டியாக மட்டும் 20 காசுகள் செலவாகிறது. மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு 16காசுகள் செலவாகிறது. நிதிக்குழு, மற்ற செலவுகளுக்கு தலா 8 காசுகள் ஒதுக்கப்படுகிறது. மத்திய அரசு ஆதரவுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பாதுகாப்புத்துறைக்கு தலா 8 காசுகள் செலவாகிறது. மானியங்கள் வகையில் 6 காசுகள், ஓய்வூதியம் என்ற வகையில் 4 காசுகள் செலவாகிறது.

union budget 2025 and where each rupee comes from and where it goes
மத்திய பட்ஜெட் 2025 | சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறையினர் விடுக்கும் கோரிக்கைகள் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com