thamimum ansari reaction on union budget 2025
நிர்மலா சீதாராமன் - தமிமும் அன்சாரிPT Web

மத்திய பட்ஜெட் | “தமிழ்நாடு அப்பட்டமாக ஓரங்கட்டப்பட்டு உள்ளது” - தமிமுன் அன்சாரி

"நிதிநிலை அறிக்கை என்பது, பரந்துபட்ட இந்திய ஒன்றியத்தின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
Published on

நடப்பு நிதி ஆண்டுக்கான (2025 -26) மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (பிப்.1) தாக்கல் செய்தார். பட்ஜெட் அறிவிப்பு குறித்து பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரியும் கருத்து தெரிவித்துள்ளார்.

thamimum ansari reaction on union budget 2025
நிர்மலா சீதாராமன்எக்ஸ் தளம்

அவர் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில், “ஒன்றிய அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது, பரந்துபட்ட இந்திய ஒன்றியத்தின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் வரி வருவாய்க்கு ஏற்ப நீதியான முறையில் வரிப் பங்கீடு நடத்தப்படவில்லை என்பதை இந்த நிதி நிலை அறிக்கை தெளிவுப்படுத்துகிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அப்பட்டமாக ஓரங்கட்டிருப்பதை எளிதில் உணர முடிகிறது.

thamimum ansari reaction on union budget 2025
மத்திய பட்ஜெட் 2025 | ”தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை” - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாட்டில் ஓடும் ரயில்கள்தான் இந்தியாவிலேயே அதிக லாபத்தை ஈட்டுகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்காதது கண்டிக்கத்தக்கது. இந்த நிதிநிலை அறிக்கையில் பீகாரிகளின்மீது காட்டக்கூடிய கருணையைக் குறை கூறவில்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்களின் மீது ஏன் இந்த பாரபட்சம் என்ற கேள்வி எழுகிறது.

பீகாருக்கு ஆப்பிளை தட்டில் வைத்து கொடுத்ததை குறை கூறவில்லை. ஆனால் தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்சம் ஒரு நெல்லிக்கனி அளவாவது திட்டங்களை தந்திருக்கலாம். ஒன்றிய அரசுக்கு ஆதரவாகக் குதித்து, குதித்து வாதாடுபவர்கள் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவில் 35 கோடி மக்களுக்கு அடிப்படை மருத்துவ - சுகாதார வசதிகள் கிடைக்காத நிலையில், அதற்கு ரூபாய் 98 ஆயிரத்து 311 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

நாட்டின் முதல்நிலை உற்பத்தி களமாக இருக்கும் விவசாயத் துறைக்கு 1 லட்சத்து 71 ஆயிரத்து 457 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பது சரியான அணுகுமுறை இல்லை. காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 விழுக்காடு என உயர்த்தி இருப்பது LIC போன்ற நிறுவனங்களின் தனித்தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில்; பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு சாமானிய மக்களிடம் பணப்புழக்கமும் குறைந்து வரும் நிலையில்; இந்த பட்ஜெட் ஒரு சார்பானதாகவும், திருப்தியற்ற வகையிலும் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

thamimum ansari reaction on union budget 2025
மத்திய பட்ஜெட் 2025 | ”மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்; ஏமாற்றம் அளிக்கிறது” - தவெக தலைவர் விஜய்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com