மத்திய பட்ஜெட் 2025 | பீகார் மாநிலத்துக்கு அதிகளவு திட்டங்கள் அறிவிப்பு - என்னென்ன தெரியுமா?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பீகார் மாநிலத்துக்கு அதிகளவு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பீகார் மாநிலத்துக்கு இந்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நிதிநிலை அறிக்கையில் அம்மாநிலத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கானா உற்பத்தியை அதிகரிப்பதற்காக பீகாரில் மக்கானா வாரியம் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதேபோல் மாநிலத்தில் உணவு பதனிடும் பூர்வோதயா திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
பீகாரில் உள்ள ஐஐடி பாட்னா விரிப்படுத்தப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பாட்னா விமான நிலையம் தரம் உயர்த்தப்படுவதோடு, பீகாரில் புதிய விமான நிலையங்கள் அமைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். பட்ஜெட் வாசிக்க தொடங்கிய ஒரு மணி நேரத்தில் பீகாருக்கு ஏழு திட்டங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் ஒருதலைப்பட்சமான நிதிநிலை அறிக்கை என எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர்.