பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025புதியதலைமுறை

பட்ஜெட் 2025 | எந்த துறைகளில் எல்லாம் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கும்? வருமான வரியில் மாற்றம் வருமா?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2025 உரையை வாசிக்க இருக்கின்றார். இந்த பட்ஜெட் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருகிறது .
Published on

வரும் சனிக்கிழமை பிப்ரவரி 1ம் தேதி 2025 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2025 உரையை வாசிக்க இருக்கின்றார். இந்த பட்ஜெட் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருகிறது . அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிபரான நிலையில், அவர் கொண்டுவந்த சில மாற்றங்கள் இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆகவே, வர இருக்கும் இந்திய பட்ஜெட்டில் சில வரி விதிப்பில் மாற்றங்கள் கொண்டு வருவதால் மட்டுமே மக்களின், சுமையானது குறையக்கூடும். மேலும் இறக்குமதி வரி மற்றும் ஏற்றுமதி வரி விதிப்பிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டால் இந்திய பொருளாதாரமானது ஏற்றத்தை காணலாம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

பட்ஜெட்டில் முக்கிய துறைகளில் மக்களின் எதிர்ப்பார்ப்பு என்ன என்பதை பார்க்கலாம்.

காற்று நிரப்பப்பட்ட பானங்கள், சிகரெட்டுகள், புகையிலை போன்ற பொருட்களுக்கு 35% வரி
காற்று நிரப்பப்பட்ட பானங்கள், சிகரெட்டுகள், புகையிலை போன்ற பொருட்களுக்கு 35% வரிpt web

புகையிலை

புகையிலைக்கு, கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இது குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் ஏதும் இல்லாத நிலையில் புகையிலை பொருட்கள் மீதான 35% வரிவிதிப்பு அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

FMCG

நுகர்வோர் பொருட்கள் (FMCG) துறையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதிக விலக்கு வரம்புகள், தகர்க்கப்பட்டால் கிராமப்புற மற்றும் நகர்ப்புற தேவைகளை அதிகரிக்கும், அதனால் அரசாங்கத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

வருமான வரி விகிதங்கள்

வருமான வரி விகிதங்களை குறைப்பதன் மூலமும், வருமான வரி அடுக்குகளில் திருத்தம் கொண்டுவரப்படுவதன் மூலமாக மக்களின் வரிசுமை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

பேக்கேஜிங்கிற்கு அதிக நிதி ஒதுக்கீடு

இந்த பட்ஜெட்டில் நிலையான உணவு பேக்கேஜிங் மற்றும் உற்பத்திக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு உற்பத்தியாளர்களிடையே எழும்பி இருக்கிறது. மேலும் ஜிஎஸ்டி இல்லாத தயாரிப்புகளை அனுமதிக்கும் ஒரு எதிர்பார்ப்பும் உள்ளது.

ரியல் எஸ்டேட் துறை

உள் கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் முன்னுரிமைகள் அதிகரிக்கப்படுமா? என்றும் வரி சலுகைகள் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? என்றும் ரியல் எஸ்டேட்த் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

MSME எதிர்பார்ப்புகள்

MSME சிறு,குறு தொழில் துறையை வலுப்படுத்த கூடுதல் பணம் செலுத்துதல், கடன் வழங்குதல், புதிய சந்தைகளை உருவாக்குதல், போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

MSME
MSMEpt desk

விண்வெளிசார்ந்த திட்டங்கள்

இஸ்ரோ சென்ற வருடங்களைப்போல இந்த வருடமும் வளர்ச்சிப்பாதையில் பயணித்துக்கொண்டு இருக்கிறது. இத்துறை மேலும் வலுப்பட அதிக நிதி ஒதுக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு (2024) அறிவிக்கப்பட்ட பட்ஜெட் ஒரு கண்ணோட்டம்

பாதுகாப்புத்துறைக்கு 4,54,773 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இது அதிகரிக்குமா?

அடுத்தப்படியாக ஊரக வளர்ச்சித்துறைக்கு 2,65,808 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறைக்கு 2,65,000 கோடி ரூபாயும்,

வேளாண் துறைக்கு 1,51,000 கோடி ரூபாயும்,

உள்நாட்டு விவகாரங்களுக்கு 1,50,000 கோடி ரூபாயும்,

கல்வித்துறைக்கு 1,25,000 கோடி ரூபாயும்,

தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறைக்கு 1,16,000 கோடி ரூபாயும்,

சுகாதாரத்துறைக்கு 89,287 கோடி ரூபாயும்,

எரிசக்தி துறைக்கு 68,769 கோடி ரூபாயும்,

சமூக நலத்துறைக்கு 56,501 கோடி ரூபாயும்,

வணிகம் மற்றும் தொழில்துறைக்கு 47,559 கோடி ரூபாயும்,

விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு சுமார் 1,000 கோடி ரூபாயும்,

நீர்பாசன வசதி திட்டங்களுக்கு 11,500 கோடி ரூபாயும்,

புதிய சாலை இணைப்பு திட்டங்களுக்கு 26,000 கோடி ரூபாயும்

ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வரும் பட்ஜெட்டானது மக்களுக்கு சாதகமாக இருக்குமா அல்லது பாதகமாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com