\
ஜியோவைப் போல் சலுகைகள் வழங்கிய பி.எஸ்.என்.எல்

ஜியோவைப் போல் சலுகைகள் வழங்கிய பி.எஸ்.என்.எல்

ஜியோவைப் போல் சலுகைகள் வழங்கிய பி.எஸ்.என்.எல்
Published on

தினந்தோறும் 1 ஜி.பி டேட்டா மற்றும் இலவச அழைப்புகளை ஒருமாதத்திற்கு பெற ரூ.143 மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என பி.எஸ்.என்.எல் சலுகை அளித்துள்ளது. 

ஜியோ நிறுவனம் வெளியிட்ட அதிரடி சலுகைகளால், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சற்று பின்னடைவை சந்தித்துள்ளன. இதனால் ஜியோவிற்கு ஈடுகொடுக்கும் வகையில் ஒவ்வோரு சிம் நிறுவனங்களும் புதுப்புது சலுகைகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்-ம் தற்போது சலுகைகளை வழங்கியுள்ளது.
அதன்படி ரூ.143 செலுத்தி ஒரு மாதத்திற்கு காண டேட்டாவை தினந்தோறும் 1 ஜி.பி என்ற அடிப்படையிலும், அத்துடன் இலவச அழைப்புகளையும் பெறமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.429 செலுத்தி 3 மாதத்திற்கான டேட்டா மற்றும் இலவச அழைப்புகளை பெற இயலும் என்றும் பி.எஸ்.என்.எல் சலுகை வழங்கியுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com