சீனப் பொருட்களை தடை செய்வது சாத்தியமா? யாருக்கு பாதிப்பு?

சீனப் பொருட்களை தடை செய்வது சாத்தியமா? யாருக்கு பாதிப்பு?
சீனப் பொருட்களை தடை செய்வது சாத்தியமா? யாருக்கு பாதிப்பு?

சீனாவிடமிருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்கிறது இந்தியா. கால்பந்துகள், கையுறைகள் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், கடிகாரங்கள் , தோரணங்கள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்கள் கால்குலேட்டர், தெர்மாமீட்டர் போன்ற சாதனங்கள், செல்போன்கள், விளக்குகள், மின்சார வாகன பாகங்கள் , மிதி வண்டிகள் , ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, காலணிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் சீனாவிடம் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்தியாவிலேயே இன்று உபயோகிக்கப்படும் கைப்பேசிகளில் 70 சதவீதத்துக்கு மேல் சீன நிறுவனங்களால் தயாரிக்கப்படுபவை. இந்தியா, சீனா இடையிலான வர்த்தகத்தில் சீனாவின் கையே ஓங்கி இருக்கிறது. இந்தியா கடந்த ஆண்டு சீனாவிலிருந்து 5 லட்சத்து 50ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இது இந்தியாவின் மொத்த இறக்குமதியில் கிட்டத்தட்ட 12 சதவீதம். ஆனால் இந்திய நிறுவனங்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்ததோ வெறும் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 760 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களைதான்.

சீனப் பொருட்களின் இறக்குமதியை தடை செய்ய வேண்டும் எனில் அதற்கேற்றார் போல நமது உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும் என்கின்றனர் வல்லுனர்கள். சீனப் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிப்பதால் இந்தியா என்ற மிகப்பெரிய சந்தையை சீனா இழக்கும். அதேவேளையில், இந்தியாவுக்கும் பாதிப்பு உள்ளது.

சீனாவிலிருந்து பாகங்களை இறக்குமதி செய்து பின்னர் அதன் மூலமாக தயாரிக்கப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்படும், அதேபோல சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு பொருட்கள் சந்தையிலே வராவிட்டால் அதற்கு பதிலாக இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும். இதனால், போட்டியின்றி பொருள்கள் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

சீனப் பொருட்களை முழுவதும் புறக்கணிக்க வேண்டும் என்றால் இந்திய தொழில்துறை மற்றும் வியாபாரிகள் மற்றும் சீனாவில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் ஆகிய அனைவரும் இதனால் ஏற்படும் கூடுதல் செலவுகள் அல்லது வியாபார நஷ்டத்தையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அப்படி ஒருங்கிணைந்து செயல்பட்டால் மாற்றம் ஏற்படும் என்கின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com