கடனை திருப்பி செலுத்த தவறிய 5 ஆயிரத்து 954 வாடிக்கையாளர்களிடம் இருந்து 70 ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்யும் நடவடிக்கைகளை பொது துறை வங்கிகள் மேற்கொண்டுள்ளன.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத நபர்கள், பாக்கி தொகை வைத்துள்ள நபர்கள், முதற்கட்டமாக கடன்வாங்கி அதனை திரும்ப செலுத்தாத வாடிக்கையாளர்களின் சொத்துக்களை ஏலம் விடும் நடவடிக்கையை பாரத ஸ்டேட் வங்கி உட்பட 21 வங்கிகள் மேற்கொண்டுள்ளன. இந்திய பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அளவு கடந்த மார்ச் மாத முடிவில், 6.41 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்நிலையில் கடனை திருப்பி செலுத்த தவறிய 5 ஆயிரத்து 954 வாடிக்கையாளர்களிடம் இருந்து 70 ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன.