நடப்பு நிதியாண்டில் ரூ.1லட்சம் கோடியை தாண்டிய வங்கி மோசடி - ரிசர்வ் வங்கியின் அதிர்ச்சி தகவல்!
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியிலேயே வங்கி மோசடி 1லட்சம் கோடியை தாண்டிவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
வங்கி மோசடி மூலம் கடந்த ஆண்டான 2018-19ம் நிதியாண்டில் ரூ.71ஆயிரத்து 543 கோடி மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. ஆனால் இந்த நடப்பு நிதியாண்டின் முதல் பாதியிலேயே வங்கி மோசடி 1லட்சம் கோடியை தாண்டிவிட்டதாக ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கொடுத்த தகவலின்படி, நடப்பு நிதியாண்டில் 398 வங்கி மோசடிகள் ரூ,50 கோடிக்கும் அதிகமானவை என்றும் கூறப்பட்டுள்ளது. 21 வங்கி மோசடிகள் ரூ.1000கோடிக்கும் அதிகமானவை என்றும் தெரிவித்துள்ளது.
கடன் வழங்கும் போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை சரியாக பின்பற்றாதது, கடனை திரும்பப் பெறும் முறையை உறுதியாக பின்பற்றாதது போன்ற காரணங்களே வங்கி மோசடிக்கு காரணம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.