கொரோனா மூன்றாம் அலை அச்சம்: 'ஆட்டோ எக்ஸ்போ' தள்ளிவைப்பு

கொரோனா மூன்றாம் அலை அச்சம்: 'ஆட்டோ எக்ஸ்போ' தள்ளிவைப்பு
கொரோனா மூன்றாம் அலை அச்சம்: 'ஆட்டோ எக்ஸ்போ' தள்ளிவைப்பு

இந்திய ஆட்டோமொபைல் துறையினருக்கு முக்கிய விழா என்றால், அது புதுடெல்லியில் நடக்கும் ஆட்டோ எக்ஸ்போதான். இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கண்காட்சி நடக்கும். இதில் ஒவ்வொரு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களுடைய புதிய மாடல் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தும். மேலும், அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து அறிவிக்கும் என்பதால் ஆட்டோமொபைல் துறையினர் இந்தக் கண்காட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

முன்னதாக 2020ல் இந்த ஆட்டோ எக்ஸ்போ நடக்கவிருந்தது. அடுத்தது, 2022-ல் நடக்கவுள்ளது. கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்த இரண்டாம் அலை, தற்போது படிப்படியாக குறைந்துவந்தாலும் அடுத்தடுத்த மாதங்களில் அடுத்தடுத்த அலை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதால், 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் நடக்க இருந்த இந்தக் கண்காட்சி தள்ளிவைக்கப்பட்டிருகிறது.

2022-ல் எந்த தேதியில், என்ன கால அட்டவணையில் இந்த எக்ஸ்போ நடைபெறும் என இந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்படும் என இந்திய ஆட்டோமொபைல் சங்கம் (SIAM) அறிவித்திருக்கிறது.

கடைசியாக 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த போது, 108 நிறுவனங்கள் அதில் கலந்துகொண்டன. 352 மாடல் வாகனங்கள் காட்சிபடுத்தப்பட்டன. இந்தக் கண்காட்சியில் 6 லட்சத்துக்கும் மேலானவர்கள் கலந்துகொண்டனர். இது நடைபெற்ற அடுத்த மாதமே லாக்டவுன் அறிவிக்கப்பட்டது இங்கே நினைவுகூரத்தக்கது.

1986-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதுவரை 15 கண்காட்சிகள் நடந்திருக்கின்றன.

2020-ம் ஆண்டு ஆட்டோமொபைல் துறையில் இருந்த மந்த நிலை மற்றும் இந்த கண்காட்சிகள் கலந்துகொள்வதற்கு அதிக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது உள்ளிட்ட சில காரணங்களால் பல முக்கிய நிறுவனங்கள் அதில் கலந்துகொள்ளாமல் இருந்தன. குறிப்பாக டிவிஎஸ் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, ராயல் என்பீல்டு, ஹோண்டா கார்ஸ், ஃபோர்டு, யமஹா, அசோக் லேலாண்ட், பியட், ஜீப் உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com