ஆடி, பிஎம்டபிள்யூ கார்களின் விலை குறைகிறது

ஆடி, பிஎம்டபிள்யூ கார்களின் விலை குறைகிறது
ஆடி, பிஎம்டபிள்யூ கார்களின் விலை குறைகிறது

ஜெர்மனை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ, இந்தியாவில் அதன் மாடல் கார் விலைகளை அதிரடியாகக் குறைத்துள்ளது.

ஆடி தயாரிப்பான ஏ3 செடான் முதல் ஏ8 பீரிமியம் செடான் வரையிலான கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் இதன் விலை, ரூ. 30 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து 1 கோடியே 15 லட்சம் ரூபாய் வரையில் இருக்கிறது. விலை குறைப்பு அறிவிப்பின் மூலம் தற்போது ஐம்பதாயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சத்து ஐம்பதாயிரம் வரை இந்த மாதிரியான கார்களின் விலை குறைகிறது. இந்த விலை குறைப்பு, ஜூன் 30-ம் தேதி வரைதான் பொருந்தும்.

இதுகுறித்து ஆடி நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரியான ரஹில் அன்சாரி கூறும் போது, பழைய கார்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையாக இது இருக்காது. புதிதாக தயாரிக்கப்படும் கார்களுக்கும் இந்த சலுகையை வழங்குகிறோம் என்றார்.

இதனைப்போல் மற்றொரு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, ஷோரூம் விலையில் இருந்து 12 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com