அட்சய திரிதியையொட்டி நகைக் கடைகளில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால் நகைகள் சேரும் என்று கூறப்படுவதால் காலை முதலே நகைக்கடைகளுக்கு ஏராளமான மக்கள் வருகை புரிந்தனர். நகைக்கடைகளில் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்தாக கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். அட்சய திரிதியையொட்டி நகைக்கடைகள் பலவும் சிறப்பு சலுகைகளை அறிவித்திருந்தன. தங்கத்தின் விலை இன்று கணிசமாக உயர்ந்திருந்தது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 9 ரூபாய் அதிகரித்து 2 ஆயிரத்து 778 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72 ரூபாய் உயர்ந்து 22 ஆயிரத்து 224 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 10 காசு அதிகரித்து 43 ரூபாய் 20 காசாக இருக்கிறது.