ஆகஸ்ட் 26ல் வெளியாகும் ஆசஸ் ‘சென்ஃபோன் 7 ' : சிறப்பம்சங்கள் ?

ஆகஸ்ட் 26ல் வெளியாகும் ஆசஸ் ‘சென்ஃபோன் 7 ' : சிறப்பம்சங்கள் ?

ஆகஸ்ட் 26ல் வெளியாகும் ஆசஸ் ‘சென்ஃபோன் 7 ' : சிறப்பம்சங்கள் ?
Published on

ஆசஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ‘சென்ஃபோன் 7’ ஆகஸ்ட் 26ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டைச் சேர்ந்த ஆசஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, புதிய ஸ்மார்ட்போனான ஆசஸ் ‘சென்ஃபோன் 7’ ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த போன் ஃப்ளிப் கேமரா வசதி கொண்டது. 64 எம்பி + 13 எம்பி பிரைமெரி கேமரா மற்றும் 20 எம்பி செல்ஃபி கேமரா இந்த போனில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் 30 வாட் மின்சாரத்துடன் சார்ஜ் செய்யக்கூடிய, 5000 எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் வழங்கபட்டுள்ளதாக தெரிகிறது.

6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே தரப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு வி10 இயங்குதளத்தில் செயல்படும். இந்த சிறப்பம்சங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதன் விலை ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் இருக்கலாம் எனப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com