பட்ஜெட் தாக்கலில் தனி பாணியைக் கையாளும் அருண் ஜெட்லி..!
பட்ஜெட் தாக்கல் செய்யும்போது நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனக்கென்று தனி பாணி ஒன்றை கையாள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
2018-19 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில், விலைவாசி குறைய நடவடிக்கை, வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர்.
இதனிடையே பட்ஜெட் தாக்கல் செய்யும்போது நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனக்கென்று தனி பாணி ஒன்றை கையாள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி நீண்ட நேர பட்ஜெட் தாக்கலுக்கு பெயர் போனவர். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு திட்டத்தையும் அவர் அறிவிக்கும் முன், எதற்காக..? ஏன்..? இந்த முடிவு எடுக்கப்பட்டது என அருண் ஜெட்லி விளக்குவார். 2014ம் ஆண்டில் தான் அருண் ஜெட்லி தனது முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பட்ஜெட் தாக்கல் செய்ய அவர் எடுத்துக்கொண்ட நேரம் இரண்டரை மணி நேரம் ஆகும். அதில் இடையே 10 நிமிடம் அருண் ஜெட்லி இடைவெளி எடுத்திருந்தார்.