ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் டீல்: மலிவான விலையில் ஆப்பிள் ஐபோன் 11!

ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் டீல்: மலிவான விலையில் ஆப்பிள் ஐபோன் 11!

ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் டீல்: மலிவான விலையில் ஆப்பிள் ஐபோன் 11!
Published on

ஆப்பிள் ஐபோன் 11 மாடல் போனின் அசல் விலை 49,900 ரூபாயாகும். ஆனால் அந்த போனை மிகவும் மலிவான விலையில் அதிகபட்சமாக 17,800 ரூபாய் வரை வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியில் தருகிறது இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட். தள்ளுபடி போக பார்த்தால் அந்த போனின் விலை 32,100 ரூபாய். இதற்கு பயனர்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ஜாக கொடுக்க வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தவிர குறிப்பிட்ட ஒரு தனியார் வங்கியின் கார்டுக்கு 5 சதவிகிதம் கேஷ்பேக் ஆஃபரும் தருகிறது ஃப்ளிப்கார்ட். 

மறுபக்கம் அமேசான் நிறுவனமோ பழைய போனை எக்ஸ்சேஞ்சுக்கு தரும் பயனர்களுக்கு ஐபோன் 11 மாடலை அதிகபட்சம் 35,000 ரூபாய்க்கு தருகிறது. ஐபோன் 11 மாடலை ஆஃபரில் வாங்க விரும்புபவர்கள் இந்த நிறுவனங்களின் தளத்திற்கு சென்று தங்களது பழைய போனின் பிராண்ட் மற்றும் IMEI எண் மாதிரியானவற்றை கொடுக்க வேண்டும். அதை செய்தால் அவர்களுக்கான தள்ளுபடி விலை எவ்வளவு என்ற விவரத்தை தெரிந்து கொள்ளலாம். 

64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஐபோன் 11 மாடல் போனை தான் இரண்டு நிறுவனங்களும் தள்ளுபடியில் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் பச்சை நிற போனுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. 6.1 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ள இந்த போனின் பின்பக்கத்தில் (ரியர் சைட்) இரண்டு கேமரா கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல ஐபோனின் பழைய மாடல் போன்களையும் தள்ளுபடி விலையில் தருகிறது ஃப்ளிப்கார்ட். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com