டேட்டா நெருக்கடி : ஹெச்டி-ல் இருந்து எஸ்டி-க்கு மாறிய அமேசான் பிரைம்

டேட்டா நெருக்கடி : ஹெச்டி-ல் இருந்து எஸ்டி-க்கு மாறிய அமேசான் பிரைம்
டேட்டா நெருக்கடி : ஹெச்டி-ல் இருந்து எஸ்டி-க்கு மாறிய அமேசான் பிரைம்

நாடு தழுவிய டேட்டா நெருக்கடியை கருத்தில் கொண்டு ஹெச்டி தரத்திலிருந்து எஸ்டி தரத்திற்கு வீடியோக்களை ஒளிபரப்புவதாக அமேசான் பிரைம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் இண்டர்நெட் தேவையை குறைக்கும் வகையில் அமேசான் பிரைம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வாடிக்கையாளர்கள் காட்சிகள் மற்றும் படங்களை கண்டு மகிழ்வது தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நாடு முழுவதும் செல்பொன்களில் இண்டர்நெட் தேவை அதிகரித்திருப்பதால் ஒரு மாற்றத்தை செய்திருப்பதாகவும், இதுவரை ஹெச்டி தரத்தில் ஒளிபரப்பப்பட்ட வீடியோக்கள், நாட்டின் இண்டர்நெட் நெருக்கடியை குறைக்கும் வகையில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை எஸ்.டி (இயல்பான) தரத்தில் ஒளிபரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, கொரோனா வைரஸ் இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உலக அளவில் இதுவரை 4,35,374 பேரும், இந்தியாவில் 562 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் இதுவரை 19,618 பேரும், இந்தியாவில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐ.டி நிறுவனங்கள் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தியுள்ளன. பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இண்டர்நெட் சேவையை வைத்திருக்கவில்லை. அவர்கள் தங்கள் செல்போனில் உள்ள இண்டர்நெட் சேவையை லேப்டாப்கள் மற்றும் கணினிகளில் இணைத்து பணிபுரிகின்றனர். இதன்காரணமாக இந்தியா, சீனா உட்பட ஆசிய நாடுகளில் இண்டர்நெட் தேவை அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com