ஆச்சர்யமூட்டும் ஐ.பி.எல் விளம்பர விற்பனை தொகையும் இன்னும் சில தகவல்களும்!

ஆச்சர்யமூட்டும் ஐ.பி.எல் விளம்பர விற்பனை தொகையும் இன்னும் சில தகவல்களும்!
ஆச்சர்யமூட்டும் ஐ.பி.எல் விளம்பர விற்பனை தொகையும் இன்னும் சில தகவல்களும்!

பென்ஸ் கார் விற்பனை அமோகம்

ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான கார்களின் விற்பனை கடந்த ஆண்டு சிறப்பாக இருந்ததாக மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் ஒரு கோடி ரூபாய் விலையுள்ள சுமார் 2,000 கார்களை பென்ஸ் விற்பனை செய்திருக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு 6 கார்களை (ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக) மெர்சிடெஸ் பென்ஸ் விற்பனை செய்திருக்கிறது. நிறுவனத்தின் மொத்த விற்பனையில் இதனுடைய பங்கு 20 சதவீதமாகவும் இருக்கிறது.

பணக்காரர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதால் பிரீமியம் கார்களின் விற்பனையும் உயர்ந்திருப்பதாக பென்ஸ் தெரிவித்திருக்கிறது. பென்ஸ் நிறுவனத்தின் முக்கியமான மாடல் மேபேக். இந்த காரை வாங்குபவர்களின் சராசரி வயது குறைந்துகொண்டே இருப்பதாக பென்ஸ் தெரிவித்திருக்கிறது. தற்போது இந்த காரை வாங்குபவர்களின் சராசரி வயது 38 ஆக இருக்கிறது. இதனால் ரூ.2.50 கோடி மதிப்பான புதிய மாடல் காரினை பென்ஸ் அறிமுகம் செய்திருக்கிறது. மேலும் பல புதிய மாடல்களை பென்ஸ் அறிமுகம் செய்கிறது.

ஐபிஎல்: விளம்பர விற்பனை ரூ.4,000 கோடி

ஐபிஎல் தொடர்பான விளம்பரங்கள் வரத்தொடங்கிவிட்டன. ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை டிஸ்னி + ஹாட்ஸ்டார் வாங்கி இருக்கிறது. இந்த நிறுவனம் ரூ.4,000 கோடி ரூபாய்க்கு விளம்பரங்களை விற்பனை செய்திருப்பதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இதுவரையிலான ஐ.பி.எல்.களில் அதிக அளவுக்கு விளம்பர வருமானம் இது என்றும் தெரிய வந்திருக்கிறது.

கடந்த வருடத்தை விட 10 சதவீதம் அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது மற்றும் விளையாடும் போட்டிகளின் எண்ணிக்கை 60 என்பதில் இருந்து 74 ஆக உயர்ந்திருப்பதால் விளம்பர வருமானமும் உயர்ந்திருக்கிறது. தொலைக்காட்சிக்கு 15 ஸ்பான்ஸர்களும் ஓடிடிக்கு 13 ஸ்பான்ஸர்களும் ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிகிறது. இது தவிர 100க்கும் மேற்பட்ட பிராண்ட்கள் விளம்பரங்களுக்கு அணுகி இருக்கின்றன. வங்கி, இ-காமர்ஸ், எஜு டெக்,  ஆட்டோ, எப்.எம்.சி.ஜி உள்ளிட்ட பல துறைகளில் இருந்தும் நிறுவனஙக்ள் முன்வந்திருக்கின்றன.

10 வினாடிக்கு ரூ.14 லட்ச ரூபாய் அளவுக்கு விளம்பர கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சில முக்கியமான போட்டிகளுக்கு ரூ.18 லட்சம் கூட நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதுவரை 85 சதவீத ஸ்லாட்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் இரு பாதியாக நடைபெற்றது. அதனால் விளம்பர வருமானம் ரூ.3,300 கோடியாக மட்டுமே இருந்தது. ஆனால் 2020-ம் ஆண்டு ரூ.3,500 கோடியாக இருந்திருக்கிறது.

விடா : ஹீரோ மோட்டோவின் புதிய இவி பிராண்ட்

இரு சக்கர வாகன பிரிவில் முக்கிய நிறுவனம் ஹீரோ மோட்டோ கார்ப். இவர்கள் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டனர். இந்த பிரிவின் தலைவர் பவன் முஞ்சால். ஆனால் குழுமத்தின் மற்றொரு பிரிவான ஹீரோ எலெக்ட்ரிக் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எலெக்ட்ரிக் வாகனத்துக்கு ஹீரோ என்னும் பெயரை வைக்க முடியாது. அந்த பெயரை பயன்படுத்தும் உரிமம் எங்களுக்கு மட்டுமே இருப்பதாக குழுமத்தின் மற்றொரு பிரிவின் தலைவரான விஜய் முஞ்சால் தெரிவித்திருந்தார்.

குழுமத்தின் அனைத்து தரப்புக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் கடந்த 2010-ம் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில் எலெக்ட்ரிக் வாகனத்துக்கு ஹீரோ என்னும் பெயரை பயன்படுத்த விஜய் முஞ்சால் குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதன் அடிப்படை வழக்கு தொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட சமரச முடிவில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் வழக்கினை பிப்ரவரி மாதம் மத்தியில் திரும்ப பெற்றது.

இந்த நிலையில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பிராண்டுக்கு விடா என்னும் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. விடா என்றால் வாழ்க்கை (லைப் –ஸ்பானிய மொழியில்) என்பது அர்த்தமாகும். இந்த பிராண்டில் முதல் எலெக்ட்ரிக் வாகனம் வரும் ஜூலை 1-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com