வணிகம்
3 நிமிடத்தில் 10 ஆயிரம் கோடி: ஆன்லைன் ஷாப்பிங்கில் அள்ளியது அலிபாபா
3 நிமிடத்தில் 10 ஆயிரம் கோடி: ஆன்லைன் ஷாப்பிங்கில் அள்ளியது அலிபாபா
மூன்றே நிமிடங்களில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை விற்று சாதனை படைத்துள்ளது அலிபாபா நிறுவனம்.
உலகின் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் அலிபாபா. இந்நிறுவனம் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இதன்படி மூன்றே நிமிடத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை விற்று சாதித்துள்ளது. சிங்கிள்ஸ் டே என்ற பெயரில் சீனாவில் ஆண்டுதோறும் நடத்தும் சிறப்பு தள்ளுபடி விற்பனை நிகழ்வில் இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கறுப்பு வெள்ளி மற்றும் சைபர் ஞாயிறு என்ற பெயர்களில் நடக்கும் சிறப்பு விற்பனையை தற்போது அலிபாபா மிஞ்சியுள்ளது. 10ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை நடக்கும் சிறப்பு விற்பனை நிகழ்வில் 150 கோடி பொருட்கள் விற்பனையாகும் என அலிபாபா மதிப்பிட்டுள்ளது