தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கட்டுப்படியாகாத அளவுக்கு மொபைல் ஃபோன் கட்டணங்கள் குறைவாக உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சந்தைப்பங்கை கைப்பற்ற கடும் போட்டி போடுவதால் கட்டணங்களை உயர்த்த முடியாத நிலை உள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தில் சிஇஓ கோபால் விட்டல் தெரிவித்தார். இன்னும் சில ஆண்டுகளில் தொலைத்தொடர்பு சந்தையில் பிஎஸ்என்எல் மற்றும் 3 தனியார் நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் நிலை விரைவில் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
டாடா டெலிசர்வீசஸ் மற்றும் டெலிநார் நிறுவனங்களை தம்மோடு இணைக்கும் முயற்சியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.