ஏர்டெல் அறிமுகப்படுத்தும் இன்டெர்நெட் டிவி

ஏர்டெல் அறிமுகப்படுத்தும் இன்டெர்நெட் டிவி
ஏர்டெல் அறிமுகப்படுத்தும் இன்டெர்நெட் டிவி

டிவியில் வழக்கமான சேனல்களுடன் இணைய தளத்தில் நாம் காண முடியும் யூ டியூப், நெட்பிளிக்ஸ் போன்ற சேவைகளையும் பெறும் வகையில் புதிய செட்டாப் பாக்சை அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல்.

பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஹைபிரிட் டிடிஎச் செட்-டாப் பாக்ஸ் மூலம் சாதாரண தொலைக்காட்சியையும் ஸ்மார்ட் தொலைக்காட்சியாக மாற்ற முடியும். வைபை வசதியை பயன்படுத்தி உங்கள் தொலைக்காட்சியில் இணையத்தில் உள்ள வீடியோக்களை பார்க்க முடியும். இதன் பெயர் ஏர்டெல் இன்டர்நெட் டிவி.

ஏர்டெல் இன்டர்நெட் டிவியின் விலை மூன்று மாதத்திற்கு ரூ 4,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, வாடிக்கையாளர்கள் வருடத்திற்கு ரூ 7,999 செலுத்தி இந்த சேவையை பெற முடியும்.

ஏர்டெல் இன்டர்நெட் டிவி அமேசானில் பிரத்தியேகமாக கிடைக்கும். மேலும், ஏர்டெல் நிலையங்கள், வலைதளங்கள் மற்றும் தொடர்பு மையங்களில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் இன்டர்நெட் டிவியில் நெட்ப்ளிக்ஸ், யூ ட்யூப் உடன் கூகுள் பிளே மியூசிக், கூகுள் பிளே கேம்ஸ், ஏர்டெல் மூவீஸ் போன்ற பல சேவைகளை பெறலாம். மேலும், 500-க்கும் மேற்பட்ட சேனல்களையும் காண முடியும்.

ஏர்டெல் இன்டர்நெட் டிவி, வைஃபை ரிசீவர், ப்ளூடூத் ரிமோட் ஆகியவையுடன் வரும். ஏற்கனவே ஏர்டெல் இணைய வசதி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த இன்டர்நெட் டிவி வாங்கும் போது சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com